முகப்பு>insulin degludec
Insulin Degludec
Insulin Degludec பற்றிய தகவல்
Insulin Degludec எப்படி வேலை செய்கிறது
Insulin Degludec நீண்ட காலம் செயல்படும் ஒரு இன்சுலின், அது ஊசி போட்டப் பின் 24 மணி நேரத்திற்கு வேலை செய்கிறது. அது உடலில் உற்பத்தி செய்யப்படும் இன்சுலினை போன்று செயல்படுகிறது. இன்சுலின் தைசை மற்றும் கொழுப்பு அணுவிலிருந்து கொழுப்பை மீண்டும் எடுத்துக்கொள்ள செய்கிறது மற்றும் கல்லீரலில் இருந்து குளுக்கோஸ் வெளிப்படுவதைத் தடுக்கிறது.
Common side effects of Insulin Degludec
இரத்த சர்க்கரை அளவு குறைதல், ஊசி போடும் இடத்தில் ஒவ்வாமை எதிர்வினை
Insulin Degludec கொண்ட மருந்துகள்
TresibaNovo Nordisk India Pvt Ltd
₹1 to ₹19422 variant(s)
Insulin Degludec தொடர்பான நிபுணரின் அறிவுரை
- உங்களுக்கு ஊசிபோட்ட இடத்தில் சிவந்துபோகுதல், வீங்குதல், சினப்பு மற்றும் அரிப்பு ஏற்பட்டால், சருமத்தில் சினப்பு, அரிப்பு அல்லது தோல் வீக்கம், இளைப்பு அல்லது சுவாசிப்பதில் சிரமம், முகம், உதடுகள், நாக்கு மற்றும் உடலின் இதர பாகங்கள் வீங்குதல்; போன்ற ஒவ்வாமை எதிர்வினைகளை அனுபவித்தால் இன்சுலின் டெக்ளுடெக் பயன்படுத்துவதை நிறுத்தவேண்டும்.
- நீங்கள் குளிர் வியர்வை போன்ற குறைந்த இரத்த சர்க்கரை அளவுகளின் அறிகுறிகள் அனுபவித்தல்; குளிர்ந்த வெளிறிய தோல் தலைவலி, விரைவான இருதய துடிப்பு, நோய்வாய்ப்படுதல், மிகவும் பசியெடுத்தல், பார்வையில் தற்காலிக மாற்றங்கள், மயக்கம், அசாதாரண தளர்ச்சி மற்றும் தொய்வு, நரம்புத்தளர்ச்சி அல்லது பயம், பதட்டமாக உணர்தல், குழப்பமாக உணர்தல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்ற குறைந்த இரத்த சர்க்கரை அளவுகள்(ஹைப்போக்ளைசீமியா) அறிகுறிகளை அனுபவித்தால், இன்சுலின் டெக்ளுடெக்-ஐ பயன்படுத்தக்கூடாது. நீங்கள் கருவுற்றிருந்தாலோ, கருவுற திட்டமிட்டிருந்தாலோ அல்லது பால் புகட்டும் தாயாக இருந்தாலோ இன்சுலின் டெக்ளுடெக்-ஐ பயன்படுத்தக்கூடாது.
- உங்களுக்கு சிறுநீரக அல்லது கல்லீரல் பிரச்சனைகள் இருந்தாலோ; உங்கள் நீரிழிவு காரணமாக நரம்பில் சேதம் ஏற்பட்டிருந்தாலோ இன்சுலின் டெக்ளுடெக்-ஐ பயன்படுத்தக்கூடாது.
- இன்சுலின் டெக்ளுடெக்-ஐ பயன்படுத்தும்போது மது அருந்தக்கூடாது
- நீங்கள் வழக்கமான உணவுகள் உட்கொள்ளாமல் அல்லது அதிகமாக உடல்பயிற்சி செய்தல் ; அல்லது தொய்வாகவோ அல்லது உடல்நலமின்மையாக இருந்தாலோ இன்சுலின் டெக்ளுடெக் உட்கொள்ளும்போது கூடுதல் கவனம் அளிக்கவேண்டும்.
- இன்சுலின் டெக்ளுடெக் தயாரிப்புகள் சருமத்தின் கீழ் பகுதியில் புகுத்தப்படவேண்டும். இதனை நரம்பு அல்லது தசையில் போடக்கூடாது. ஊசி செலுத்தும் கோணம் மிகவும் முக்கியமானது; ஊசி போடும் முறையை முன்னதாகவே உங்கள் மருத்துவரிடம் கலந்தாலோசிக்கவேண்டும்
- இன்சுலின் டெக்ளுடெக் தயாரிப்புகள் நரம்பு அல்லது தசை மூலமாக போடக்கூடாது. இவற்றை இன்பியூஷன் பம்ப்களில் பயன்படுத்தக்கூடாது.
- ஊசியிடும் இடங்கள் மேல் கை(டெல்டாயிட்), அடிவயிறு, பின்புறம் மற்றும் தொடை பகுதிகளில் மாற்றி மாற்றி அடுத்தடுத்து செலுத்தப்படவேண்டும், இதனால் ஒரு இடத்தில் 1அல்லது 2 வாரங்களுக்கு ஒருமுறைக்கு மேல் போடக்கூடாது. இது ஊசி போட்ட இடத்தில் சரும மாற்றங்களுக்கு உட்படுத்தலை குறைக்கும்.
- இன்சுலின் டெக்ளுடெக் தெளிவாக இல்லாமல் அல்லது நிறமற்று அல்லது ஏதேனும் பொருட்கள் தென்பட்டால் அதனை பயன்படுத்தக்கூடாது.
- இன்சுலின் மருந்தளவு தேவைப்பாட்டை விடவும் அதிகமாக இருந்தால் ஹைப்போக்ளைசீமியா ஏற்படும். எப்பொழுதுமே உங்கள் சர்க்கரை அளவுகளை வழக்கமான இடைவெளிகளில் சோதிக்கவும்.
- உங்களுக்கு ஹைப்போக்ளைசீமியா (அதாவது குளிர் வியர்வை; குளிர்ந்த வெளிறிய சருமம்; தலைவலி, விரைவான இருதய துடிப்பு, நோய்வாய்ப்படுதல், மிகவும் பசியெடுத்தல், பார்வையில் தற்காலிக மாற்றங்கள், மயக்கம், அசாதாரண தளர்ச்சி மற்றும் தொய்வு, நரம்புத்தளர்ச்சி அல்லது பயம், பதட்டமாக உணர்தல், குழப்பமாக உணர்தல், கவனம் செலுத்துவதில் சிரமம் போன்றவை) அறிகுறிகளை அனுபவித்தால், சர்க்கரை அல்லது கார்போஹைட்ரேட்ஸ் போன்றவற்றை உட்கொண்டு விரைவாக உங்கள் இரத்த சர்க்கரை அளவை உயர்த்தவும்.
- உங்களுக்கு குறைந்த/அதிக சர்க்கரை அளவுகள் இருந்தாலோ அல்லது உங்கள் பார்வையில் ஏதேனும் பிரச்னையை சந்தித்தாலோ உங்களால் கவனம் செலுத்துவதில் சிரமம் ஏற்படுவதால், இயந்திரங்களை கையாளும்போதும் ஓட்டும்போதும் முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.